ஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகல்ல, மெதகம பிரதேசத்திலுள்ள விவசாய நிலமொன்றில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி ஒருவரின் சடலமொன்றினை இன்று காலை 10 மணியளவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்  71 வயதுடைய கே.பீ.டிம். டிக்கிரி பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தான் விவசாயம் செய்யும் விவசாய நிலத்தில் உள்ள குடியிருப்பில் உறங்கியவாறு இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஊவா பரணகம - வெவேகம பகுதியை சேர்ந்த குறித்த விவசாயி கொலை குற்றவாளியாக 8 வருட காலம் சிறைவாசல் இருந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மரண விசாரணையும், பிரேத பரிசோதனையும் முடிந்தபின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.