அந்த இரண்டு முதி­ய­வர்­களைத் தொடர்ந்து ஆர். அழகன் மற்றும் செல்­லையா போன்ற மேலும் இரண்டு முதி­ய­வர்­களும் அதே­போன்ற ஆதங்­கங்­க­ளையே வலுப்­ப­டுத்­த­லா­யினர். அவர்­களும் தமது காலம் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் தற்­போது தமது பிள்­ளைகள் முகங்கொ­டுக்கும் நெருக்­க­டி­க­ளையும், எதிர்­கா­லத்தில் தமது பேரப்­பிள்­ளைகள் பரம்­ப­ரை­யி­ன­ருக்கு என்ன நடக்கும் என்­பதை நினைத்தும் ஆழ்ந்த கவ­லையில் இருப்­ப­தாக தமது ஆழ்ந்த கவ­லை­களை வெளிப்­ப­டுத்தி நின்­றார்கள்.

இந்த மூத்­த­வர்­களைத் தொடர்ந்து அவர்கள் வழி­வந்த இரண்­டா­வது பரம்­ப­ரை­யினைச் சேர்ந்­த­வர்­களில் சிலரும் தமது நெருக்­க­டி­யான அன்­றா­ட­வாழ்வு தொடர்­பிலும் எதிர்­கால அச்சம் குறித்தும் மனம்­விட்டுப் பேச ஆரம்­பித்­தார்கள். இருப்­பினும் தமது புகைப்­ப­டங்­களை பிர­சு­ரிக்க வேண்டாம் என்ற நிபந்­த­னை­யுடன் சில அதிர்ச்சி தரும் விட­யங்­களை எடுத்­து­ரைத்­தனர். 

முத­லா­வ­தாக எஸ்.மோகன் (வயது30) என்ற குடும்­பஸ்தர் கூறு­கையில், 

எனது தாய் தந்­தையர் சிலோ­னி­லி­ருந்து வந்த பிறகு இதே மண்ணில் தான் பிறந்தேன். தற்­போது திரு­ம­ண­மாகி எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்­கின்­றனர். மிக அண்­மை­யி­லேயே லயன் காம்­ப­றா­வொன்று கிடைத்­ததால் எனது குடும்­பத்­தி­ன­ருடன் அங்கு வசிக்­கின்றேன். 

நானும் மனை­வியும் தோட்­டத்தில் தான் தொழில் புரி­கின்றோம். நாங்கள் இந்த மண்ணில் பிறந்­ததால் எங்­க­ளுக்கு 20 முதல் 26 நாட்கள் வரையில் தான் தோட்­டத்­தில் தொழில் செய்­வ­தற்கு அனு­மதி அளிக்­கின்­றார்கள். ஒரு ­நா­ளைக்கு 30 கிலோ இறப்பர் பால் எடுக்க வேண்டும். எட்டு மணித்­தி­யா­லங்கள் வேலை செய்ய வேண்டும். நாளொன்­றுக்கு 403 ரூபா சம்­பளம் கொடுக்­கின்­றார்கள். அதனை விடவும் மேல­தி­க­மாக வேலை செய்யும் ஒவ்­வொரு மணித்­தி­யா­லத்­திற்கும் 6 ரூபா சம்­ப­ள­மாக கொடுக்­கின்­றார்கள். 

எங்­க­ளு­டைய வேலை நிரந்­த­ர­மா­னது அல்ல. நாள் வேலை போன்­றது தான். கஸுவல் (நிரந்­த­ர­மற்ற) அடிப்­ப­டையில் தான் வைத்­தி­ருக்­கின்­றார்கள். எங்­களை நிரந்­த­ர­மாக்­கு­மாறு கோரிய போதும் நீங்கள் சிலோன்­காரர் இல்­லையே. இங்கு தான் பிறந்­துள்­ளீர்கள். நீங்கள் மலை­யா­ளிகள் என்று கூறி வாய­டைக்­கின்­றார்கள். 

சரி எங்­க­ளுக்கு சம்­ப­ளத்­தினை கூட்­டுங்கள் இந்த சம்­ப­ளத்தில் எது­வுமே செய்ய முடி­யா­துள்­ளது என்று கோரினால் இறப்­ப­ருக்­கான விலை சந்­தையில் குறைந்­துள்­ளது என்று பதி­ல­ளிக்­கின்­றார்கள். 

எங்­க­ளு­டைய தாய் தந்­தை­யர்கள் அந்­தக்­கா­லத்தில் மிகவும் கஷ்­டத்­துக்குள் இருந்­ததால் நாங்கள் முறை­யாக கல்­வியை நிறை­வாக பெற­வில்லை. ஆகவே தற்­போது எங்­களைப் போன்று எமது பிள்­ளைகளும் ஆகி­வி­டக்­கூ­டாது என்று கருதி அவர்­களை எவ்­வித கஷ்­டப்­பட்­டா­வது கல்வி கற்­பித்து நல்ல எதிர்­கா­லத்­தினை ஏற்­ப­டுத்திக் கொடுப்போம் என்று நினைத்­தாலும் அதிலும் பிரச்­சி­னைகள் உள்­ளன.

இங்­குள்ள தோட்­டப்­பா­ட­சா­லையில் தான் எமது பிள்­ளை­க­ளுக்கு அனு­மதி கிடைக்­கின்­றது. தமிழ் மொழியில் அல்­லது மலை­யாள மொழியில் தான் கல்­வியைத் தொட­ர­வேண்­டி­யுள்­ளது. அவர்­க­ளுக்கு ஆங்­கில மொழிக் கல்­வியை கற்க முடி­யாத நிலை­மையே இருக்­கின்­றது. மலை­யாள சமூ­கத்­திற்கு அவ்­வா­றான வாய்ப்­புக்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. 

அவ்­வாறு கற்­பிக்க வேண்­டு­மா­க­வி­ருந்தால் ஆயிரம் ரூபா­வுக்கு அதி­க­மான தொகை செலுத்தி தனியார் பாட­சா­லை­க­ளுக்கு தான் அனுப்ப வேண்­டி­யுள்­ளது. எனது குடும்­பத்தின் வரு­மா­னத்தில் அது இய­லாத காரி­ய­மா­கவே இருக்­கின்­றது. இந்த விட­யங்­களை தொழில் சங்­கத்­தி­ன­ரிடம் கூறினோம்.

கம்­யூனிஸ்ட், பா.ஜ.க., காங்­கிரஸ் இப்­படி பல தொழிற்­சங்­கங்கள் தோட்­டங்­களில் உள்ள மக்­க­ளுடன் தொடர்­பு­களை பேணு­கின்­றன. அவர்கள் இந்த விட­யத்­தினை பேசு­கின்­றதாக கூறு­வார்கள். இருப்­பினும் அது தொடர்பில் என்ன நடந்­தது என்­பதை நாங்கள் அறி­வ­தில்லை. அவர்­களும் எந்த முடி­வு­க­ளையும் இது­வ­ரையில் கூறி­ய­தில்லை.

எமது கஷ்­டங்­களை தமி­ழ­கத்தில் எம்­மைப்­போன்­ற­வர்­க­ளுக்­காக குரல்­கொ­டுக்கும் சீமான், வைகோ, திரு­மா­வ­ளவன் போன்­ற­வர்­களின் கவ­னத்­திற்கு கொண்டு சென்றால் ஏதா­வது தீர்வு கிடைக்கும் என எண்­ணினோம். அதற்­கு­ரிய சில முன்­னெ­டுப்­புக்­களைச் செய்தோம். 

இருப்­பினும் அவர்கள் இந்த விட­யத்­தினை கையாண்டால் நிரந்­த­ர­மற்ற வேலையில் இருக்கும் எமக்கு அதுவும் இல்­லாது போய் நடுத்­தெ­ரு­வுக்கு கொண்டு வரப்­பட்டு விடு­வோமோ என்ற அச்­சத்தின் கார­ணத்தால் அமை­தி­யா­கவே தற்­போது வரையில் இருந்து வரு­கின்றோம் என்றார். 

இவ­ரைத்­தொ­டர்ந்து மற்­று­மொரு இளம் குடும்­பஸ்­த­ரான எஸ்.சிவ­னடி(வயது32) என்­பவர் கூறு­கையில், 

எனது தந்­தையார் ஓய்வுபெற்ற பின்னர் எனக்கு தோட்­டத்தில் வேலை செய்­வ­தற் கான வாய்ப்பு கிடைத்­தது. எனக்கு திரு­ம­ண­மாகி இரண்டு குழந்­தைகள் இருக்­கின்­றார்கள். எனது பெற்­றோ­ரு­ட­னேயே நானும் எனது மனைவி பிள்­ளைகள் எல்லோரும் வசித்து வரு­கின்றோம். மிகவும் இட­நெ­ருக்­க­டி­யான நிலையில் தான் அன்­றாட வாழ்வைக் கழிக்­கின்றோம். தந்­தை­க்கு பின்னர் எனக்கு தோட்­டத்தில் வேலை செய்­வ­தற்­கான வாய்ப்­பினை வழங்­கி­னாலும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட சலு­கைகள் எமக்கு வழங்­கப்­ப­டு­வ­தில்லை. ஓய்­வூ­தியம், மருத்­துவ கொடுப்­ப­னவு, ஊழியர் சேம­லா­ப­நிதி போன்­றவை எமக்கு இல்லை. காரணம் நாங்கள் தற்­கா­லிக வாய்ப்­பி­னையே பெற்­றி­ருக்­கின்றோம். 

அதனை விடவும் ஆகக்­கூ­டு­த­லாக எமக்கு 20நாட்­களே வேலை செய்­வ­தற்­கு­ரிய வாய்ப்­புக்கள் அண்­மைக்­கா­ல­மாக கிடைக்­கின்­றன. எஞ்­சிய பத்து நாட்கள் பணி­யாற்­று­வ­தற்­காக எமக்கு தோட்­டத்­துக்கு வெளியில் யாரும் வாய்ப்­பினை வழங்க மாட்­டார்கள். 

இவ்­வாறு இரு­பது நாட்கள் பணி­யாற்­றினால் நாம் எட்­டா­யிரம் ரூபா பணத்­தினை பெற்­றுக்­கொள்வோம். அதில் ஆறுபேர் வாழ்க்கை நடத்த வேண்டும். அதனை விடவும் எல்.ஐ.சி (காப்­பு­றுதி), பஞ்­சா­யத்து வரி, கேரள மாநில காப்­பு­றுதி, அட்வான்ஸ் (முற்­பணம் பெற்­றி­ருந்தால் அத்­தொகை) 50 அல­கு­க­ளுக்கு மேலே மின்­சாரம் பயன்­ப­டுத்­தி­யி­ருந்தால் அதற்­கான கட்­டணம் இப்­படி எல்­லா­வற்­றையும் செலுத்­தினால் மேல­திக வேலைக்­கொ­டுப்­ப­ன­வுடன் சேர்த்து ஆகக்­கூ­டி­யது 7ஆயிரம் ரூபா மட்­டுமே பெற்­றுக்­கொள்ள முடி­கின்­றது. 

இத­னை­வைத்து நான்கு பேரின் மூன்று வேளை உணவு, பிள்­ளை­களின் படிப்புச் செல­வு­களை எப்­படி நிறைவு செய்­து­கொள்ள முடியும்? அண்­மைய காலங்­களில் மேல­திக வேலை நேரத்­தி­னையும் குறைத்து விட்­டார்கள். இறப்­ப­ருக்­கான விலை வீழ்ச்­சியால் இல­ாப­மில்லை என்­பதால் அவ்­வாறு செய்­துள்­ள­தாக கூறு­கின்­றார்கள். 

நாங்கள் இப்­ப­டித்தான் எமது வாழ்க்­கையை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்றோம். எமது பிள்­ளை­க­ளுக்கு இதனை விடவும் நிலைமை மோச­மாக இருக்கும் என்று அச்­சப்­ப­டு­கின்றோம்.அவர்கள் இவ்­வாறு தோட்­டங்­களில் கஷ்­டப்­ப­டக்­கூ­டாது என்று சிந்­திக்­கின்றோம்.

நாங்கள் பணி செய்­வது அர­சாங்க தோட்­டங்களில். குறிப்­பாக நாமி­ருக்கும் தோட்­டத்தில் மேற்­பார்­வை­யாளர் உள்­ளிட்ட ஏனைய ஊழி­யர்கள் என 200 பேர் வரையில் வேலை செய்­கின்­றார்கள்.அவர்கள் அனை­வ­ருக்கும் அர­சாங்க சம்­ப­ளமே கொடுக்­கப்­ப­டு­கின்­றது. எம்மில் அதற்கு பொருத்­த­மா­ன­வர்கள் இருந்­தாலும் மலை­யா­ளத்­தி­ன­ருக்கே அவ்­வாய்ப்­புக்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன என்று குறிப்­பிட்டார். 

அவ­ரை­ய­டுத்து மற்­றொரு குடும்­பஸ்­த­ரான எஸ்.ஸ்ரீதரன் என்­பவர் கூறு­கையில், நானும் இந்த தோட்­டத்தில் தான் வேலை செய்­கின்றேன். எங்­க­ளது பெற்­றோரின் வேலை­களைத் தான் எமக்கு கொடுத்­தி­ருக்­கி­றார்கள். ஆனால் அவர்­க­ளுக்கு வழங்­கிய நலன்­களை எங்­க­ளுக்கு வழங்க மறுக்­கின்­றார்கள்.  அதற்­கான விளக்­கத்­தினை கேட்டால் நாங்கள் கேர­ளாவில் பிறந்­த­வர்கள் என்று கூறு­கின்­றார்கள். ஆனால் எங்­களை இன்­னமும் சிலோன்­க­ாரர்கள் என்றே அழைக்­கின்­றார்கள். எங்­க­ளு­டைய சொந்­தங்கள் இன்­னமும் அங்­குள்­ளன. நாங்கள் இந்­திய பிர­ஜா­வு­ரி­மையைப் பெற்­றி­ருக்­கின்­றோமே தவிர எங்­க­ளுக்கு இந்த மாநி­லத்­த­வ­ருக்கு வழங்கும் எந்­த­வி­த­மான சலு­கை­களும் கிடைப்­ப­தில்லை. இரண்டாம் தர பிர­ஜைகள் போன்று தான் இங்கு இருக்­கின்றோம். 

சம்­ப­ளப்­பி­ரச்­சினை, வீட்­டுப்­பி­ரச்­சினை என்று பல பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு இத்­தனை காலங்­க­ளையும் கடந்து வந்­தி­ருக்­கின்றோம். இவற்றை எல்லாம் விடவும் நாங்கள் அன்­றாட தேவை­யான தண்­ணீரை பெறு­வ­தற்கு கூட பெரும் சிக்­கலை எதிர்­நோக்­குகின்றோம். தோட்­டத்தின் கீழ் பகு­தியில் உள்ள கிணற்­றி­லி­ருந்து தான் தண்ணீர் மேலே உள்ள லயன்­க­ளுக்கு அனுப்பப்படு­கின்­றது. அதனால் சுழற்சி முறையில் தான் தண்ணீர் வழங்­கப்­ப­டு­கின்­றது. ஒன்­று­விட்ட நாளுக்கு ஒரு தடவை தான் ஒவ்­வொரு லயன் தொகு­தி­க­ளுக்கும் தண்ணீர் கிடைக்­கின்­றது. தண்ணீர் திறந்து விடப்­படும் குறிப்­பிட்ட நேரத்தில் நாம்குளிப்­ப­தி­லி­ருந்து குடிப்­ப­தற்கு வரையில் அவற்றை குடங்களில் பாத்திரங்களில் பிடித்து சேகரிப்போம். 

பின்னர் ஒருநாள் விட்டு அதற்கு அடுத்த நாள் தண்ணீர் திறந்து விடப்

படும் போதே எம்மால் தண்ணீரைப் பெற்றுக்

கொள்ளமுடியும். திடீரென தண்ணீர் தீர்ந்து விட்டால் கூட எமக்கு மாற்று வழி எதுவும் கிடையாது. எமது தோட்டத்தில் மழைநீர் சேகரிப்புக்காக ஒரு தாங்கி கட்டப்பட்டுள்ளபோதும் அதனை பராமரிப்பது இல்லை. 

இதனால் தான் தண்ணீருக்கு கூட நாங்கள் தவமிருக்க வேண்டிய நிலைமையில் இருக்

கின்றோம். இவ்வாறு தான் நாம் ஒவ்வொரு பொழுதையும் கழிக்கின்றோம். இது தொடர்

பில் யாரிடம் பேசுவது? எமது விடயங்களை கையாளும் அலுவலகங்கள், அதிகாரிகள் இருந்தும் கூட அவர்கள் அக்கறை கொண்டிருக்கின்றார்களா? இல்லை. திருவனந்தபுரத்துடன் (கேரளாவின் தலைநகர்) திருப்பி அனுப்பப் படுகின்றார்களா? என்பது கூட எமக்கு தெரியாது என்றார். 

வெள்ளியன்று தொடரும்