இந்­தோ­னே­சி­யாவின் பாலித் தீவில் வாழும் இந்து சமூ­கத்­தி­னரின்  நாட்­காட்­டியின் பிர­காரம்  நாளை சனிக்­கி­ழமை  புது­வ­ருடம் பிறக்­கின்ற நிலையில்  அத­னை­யொட்டி அந்­நாட்­டி­லான  கைய­டக்கத் தொலை­பேசி மற்றும் கையில் எடுத்துச் செல்­லக்­கூ­டிய கணினி உப­க­ர­ணங்­க­ளுக்­கான இணை­யத்­தள சேவை இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் இந்த  நயிபி புதுவருட தினத்­தை­யொட்டி அந்தத் தீவின் விமான நிலை­யமும் அந்­நாட்டு நேரப்­படி நாளை சனிக்­கி­ழமை காலை 6.00  மணி­யி­லி­ருந்து  24  மணி  நேரத்­துக்கு   மூடப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

நயிபி புது­வ­ருட தின­மா­னது  மௌன தினத்தைக் குறிக்­கின்ற நிலையில்  அந்தப் பிராந்­தி­யத்­தி­லுள்ள  பல இந்­துக்கள் கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளுக்கும்  இணை­யத்­தள பக்­கங்­க­ளுக்கும்  அடி­மை­யாகி புது­வ­ருட நிகழ்வின் தார்ப்­ப­ரி­யத்தை மீறும் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டலாம் என்­ப­தா­லேயே அந்த சேவை­களை நிறுத்த  நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக  பிராந்­திய இந்து சபையின் தலைவர் குஸ்ரி நகுராஹ் நுடி­யனா தெரி­வித்தார். 

ஆனால்  ஹோட்­டல்கள்,  பொது­ச்சேவை கள்,  விமா­ன­சே­வைகள், வங்­கிகள் மற்றும்   பாது­காப்பு சேவைகள்  என்­ப­வற்­றி­லான வைபை சேவைகள்  வழமை  போன்று  செயற்படும் என  இந்தோனேசிய தொலை த்தொடர்பாடல் அமைச்சின் பாலிக்கான தலைமை அதிகாரி நயோமன் சுஜனா கூறினார்.