20 ஆம் திகதி ஜெனிவா விரை­கிறார் மாரப்­பன

Published By: Robert

16 Mar, 2018 | 12:46 PM
image

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஜெனி­வாவில் நடை­பெற்று வரு­கின்ற ஐக்­கி­ய­நா­டுகள் மனித  உரிமை பேர­வையின் 37ஆவது கூட்டத் தொடரில் எதிர்­வரும் 21 ஆம் திகதி, 20 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள   இலங்கை தொடர்­பான விவா­தத்தில் பங்­கேற்கும் நோக்கில் வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன  தலை­மை­யி­லான அர­சாங்கத்  தூதுக்­குழு எதிர்­வரும் 20 ஆம்­தி­கதி ஜெனிவா வர­வுள்­ளது.   

 அதன்­படி 21 ஆம்­தி­கதி நடை­பெறும் விவா­தத்தில்   இலங்­கையின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன உரை­யாற்­ற­வி­ருக்­கின்றார். அவரின்   உரையில் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் தொடர்பில் அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள  வேலைத்­திட்­டங்கள் குறித்து வெளி­வி­வ­கார அமைச்சர் விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார். 

வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­ன­வுடன்  வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரி­களும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் உயர் அதிகாரிகளும்   ஜெனிவாவிற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்