உலகம் முழுவதும் காற்று மாசால் ஆண்டொன்றுக்கு சுமார் 55 இலட்சம்பேர் உயிரிழந்து வருவதாக சர்வதேச ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த உயிரிழப்பானது இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் 55 சதவீதமாகக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, காற்று மாசினால் ஆண்டுதோறும் 55 சதவீதமானவர்கள் இறக்கின்றார்கள் எனவும் இதனால் இப்போதே உலக நாடுகள் அனைத்தும் விழித்துக்கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், உலக நாடுகள் இதனைக் கருத்திலெடுக்காவிட்டால் இதன் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2013 இல் இந்தியாவில் 14 இலட்சம் பேரும் சீனாவில் 16 இலட்சம் பேரும் காற்று மாசு காரணமாக உயிரிழந்திருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.