தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை தீயணைப்புத்துறை வீரர் ஒருவர் காலால்  உதைத்து காப்பாற்றிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

சீனாவின் நன்ஜிங் நகரில் அடுக்குமாடி கட்டிடத்தில் 8 ஆவது மாடியில் வசிக்கும் பெண் ஒருவர். தனது வீட்டின் ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக கூறியுள்ளார்.

இதனால் அங்கிருந்த மக்கள்  தீயணைப்புத்துறைக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணின் வீட்டின் ஜன்னல் வழியாக தீயணைப்பு வீரர் ஒருவர் ஏறி,

ஜன்னல் மேல் தற்கொலை செய்வதற்காக அமர்ந்திருந்த பெண்ணை  தீயணைப்பு வீரர் காலால்  உதைத்து வீட்டிற்குள் தள்ளி காப்பாற்றியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது  சமூகவளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த மக்கள் அனைவரும் அந்த தீயணைப்பு வீரரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.