பேஸ்புக் மீதான தற்காலிக தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை அடுத்து கடந்த 7 ஆம் திகதிமுதல் நாட்டில் சமூகவலைத்தளங்களுக்கு தேசிய பாதுகாப்பு கருதி தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் வைபர் சமூக வலைத்தள சேவை மீள ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு முதல் வட்ஸ்அப் சேவையும் வழமைக்குத் திரும்பியது.

இந்நிலையில் பேஸ்புக் தொடர்பில் தற்காலிக தடை நீடிக்கப்பட்டிருந்த நிலையில் பேஸ்புக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை வந்து இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட நிலையில் பேஸ்புக் மீதான தற்காலிக தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.