புகை பிடிப்பதால் இதயம், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை!!!

Published By: Digital Desk 7

15 Mar, 2018 | 12:38 PM
image

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் கேட்கும் திறன் குறையும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் இதயம், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. கேட்கும் திறனும் பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக 50,000 பேரிடம் சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

"புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட, புகை பழக்கம் உள்ளவர்களுக்கு கேட்கும் திறன் குறையும் அபாயம் அதிகமாக இருக்கும்" என கூறப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம் கேட்கும் திறனை 20 லிருந்து 60 சதவீதம் வரை பாதிக்கும். ஒலி மாசுவினால் ஏற்படுவதை விட புகைப்பழக்கம் கேட்கும் திறனை அதிக அளவில் பாதிக்கும். 

இது குறித்து பேசிய ஜப்பான் விஞ்ஞானி குயான்குயான்,

"பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின்னரே இந்த முடிவு வெளியிடப்பட்டது. புகைப்பழக்கம் கேட்கும் திறனை அதிக அளவில் பாதிக்கும் என்பதற்கு இந்த ஆராய்ச்சி முக்கிய காரணமாக அமையும். கேட்கும் திறன் முழுவதும் பாதிக்கப்படுவதற்கு முன் புகைப்பழக்கத்தை நிறுத்துவது மிக அவசியமானது" என கூறினார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29