மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள துறை நீலாவனை பிரதேசத்தில் பெண் ஒருவரை முச்சக்கரவண்டி  ஒன்றில் கடத்திய பெண்ணின் சிறியதந்தையார் அவரின் நன்பர் ஆகிய இருவருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா நேற்று  உத்தரவிட்டார்.

துறை நீலாவனையை சேர்ந்த 22 வயதுடைய குறித்த பெண் செவ்வாய்கிழமை பிரத்தியோக வகுப்பிற்கு சென்று திரும்பும் போது அவரை களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த அவரின் சிறியதந்தையார் அவரின் நண்பருடன் வலுக்கட்டாயமாக அப்பெண்ணை ஆட்டோவில் முச்சக்கரவண்டி  ஒன்றில் கடத்திச் சென்றுள்ளார்.

இதனையடுத்து பெண்ணின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து,விரைந்த பொலிஸார் சம்பவ தினத்தன்றே பெண்ணை மீட்டதுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்த சந்தேக நபர்களை  நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இருவரையும் 14 நாட்டகள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.