பாகிஸ்தானில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தினரிடம் பயிற்சி பெற்ற அமெரிக்கருக்கு 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான முகனாத் மகமது அல் பரேக் என்பவர் பாகிஸ்தானில் அல்கொய்தா  இயக்கத்தினரிடம் பயிற்சி பெற்று வெளிநாட்டுக்கு சென்று அல்கொய்தா இயக்கத்திலும் சேர்ந்து விட்டார்.

அமெரிக்கர்களை கொல்வதற்கு அல்கொய்தா  இயக்கத்தினர் சதித்திட்டம் தீட்டி செயல்படுத்துவதற்கு இவர் ஆதரவு காட்டி வந்து உள்ளார்.

குறிப்பாக 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் அமெரிக்க படைவீரர்களை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டி உள்ளார்.

இது தொடர்பான வழக்கில் பரேக் கைது செய்யப்பட்டு,  அமெரிக்க நீதி மன்றில் பயங்கரவாத வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையில் பரேக் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து  45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.