இலங்கை தொடர்­பான முத­லா­வது விவாதம் நாளை

Published By: Priyatharshan

15 Mar, 2018 | 09:40 AM
image

இலங்­கையின் மனித உரிமை விவ­காரம் குறித்த  காலக்­கி­ரம மீளாய்வு   தொடர்­பான விவாதம்   நாளை வெள்­ளிக்­கி­ழமை   ஐக்­கி­ய­நா­டுகள் மனித  உரிமை பேர­வையில்    நடை­பெ­ற­வுள்­ளது. 

இதில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் முதலில் உரை­யாற்­ற­வுள்­ள­துடன்   இதன்­பின்னர்   உறுப்பு நாடுகள் தமது நிலைப்­பா­டு­களை அறி­விக்­க­வுள்­ளன. 

அத்­துடன்   இலங்­கையின் சார்பில்    ஜெனி­வா­விற்­கான  வதி­விடப் பிர­தி­நிதி   இந்த விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்ளார்.   இதன்­போது இலங்­கை­யா­னது 2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட  பிரே­ர­ணைக்கு அமை­வாக  செயற்­பட  வேண்­டு­மெ­னவும்  அந்தப் பிரே­ர­ணையின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்த வேண்­டு­மென்றும்    ஐ.நா. மனித  உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் வலி­யு­றுத்­த­வுள்­ள­துடன்  இலங்கை  விசேட பொறி­மு­றை­யொன்றை மேற்­கொண்டு  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்­த­வி­ருக்­கின்றார். 

அதே­போன்று   சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­தி­களும்  இலங்கை தொடர்­பான இந்த விவா­தத்தில் கலந்து கொண்டு   இலங்­கை­யா­னது  பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதியை நிலை­நாட்­ட­வேண்­டு­மென  வலி­யு­றுத்­த­வுள்­ளனர். 

இதே­வேளை இந்த விவா­தத்தில் கலந்து கொண்டு    உரை­யாற்­ற­வுள்ள    ஜெனி­வா­விற்­கான  இலங்கை பிர­தி­நிதி   இலங்­கை­யா­னது கடும் சவால்­க­ளுக்கு மத்­தியில்  பாதிக்­கப்­பட்ட  மக்­க­ளுக்கு நம்­ப­க­ர­மான முறையில் நீதியை வழங்க நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வ­தாக தெரி­விக்­க­வி­ருக்­கிறார். 

 கடந்த  பெப்­ர­வ­ரி­மாதம் 26ஆம் திகதி ஆரம்­ப­மான ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர்  எதிர்வரும் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.  இலங்கை தொடர்பான மற்றுமொரு விவாதம் எதிர்வரும்  21ஆம் திகதி மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளமை   குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38