லிந்துலை வோல்ட்றீம் தோட்டத்தில் இன்று மதியம், தேயிலை தோட்டத்தில்  வேலை செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் மீது பாம்பு தீண்டியதில் அவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லிந்துலை வோல்ட்றீம் தோட்டத்தைச் சேர்ந்த பாப்பாத்தி வயது (31) என்பவரே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த தொழிலாளி தேயிலைத்தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, விரியன் பாம்புக்கடிக்கு உள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.