டோக்கியோவிலுள்ள கழிவு முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி

Published By: Priyatharshan

14 Mar, 2018 | 05:36 PM
image

ஜப்பானுக்கு அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று முற்பகல் டோக்கியோவில் உள்ள நவீன கழிவு முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்டார்.

சுமார் 9.3 மில்லியன் மக்கள் வாழும் டோக்கியோ நகரில் நாளாந்தம் 11 ஆயிரம் மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் வெளியேற்றப்படுவதுடன், இவற்றை முகாமைத்துவம் செய்வதற்காக இது போன்ற 23 மத்திய நிலையங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி, பார்வையிட்ட சினகாவாவில் உள்ள திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் சுமார் 60 மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் நாளாந்தம் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சூழல் நட்புடைய வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், அந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி பார்வையிட்டார்.

கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு மேலதிக பெறுபேறாக உற்பத்தி செய்யப்படும் அனல்மின் மின்சக்தியாக மாற்றப்படுவதுடன், இந்த மின்சக்தி திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் பயன்பாட்டுக்காக பெற்றுக்கொள்ளப்படுவதுடன், எஞ்சிய தொகை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் திண்மக் கழிவு பிரச்சினையை தீர்ப்பதற்கு இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயவுள்ளதாகவும், இதற்கு ஜப்பானின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் தலைவரினால் இந்த நிலையத்தின் பணிகள் குறித்து ஜனாதிபதி, உள்ளிட்ட குழுவினருக்கு விரிவாக விளக்கப்பட்டது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்ஹ ஆகியோரும் இந்கிழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08