அண்மையில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட இன வன்முறையினை தொடர்ந்து பெருந்திரளான சுற்றுலா பயணிகள் நுவரெலியா மாவட்டத்தை நோக்கி வருகை தந்த வண்ணமுள்ளனர்.

கண்டியில் ஏற்பட்ட இன வன்முறையினை தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமது சுற்றுலாவிற்காக நுவரெலியா,எல்ல,சிவனொளிபாதமலை,ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களை நோக்கி படையெடுத்துள்ளதாக தெரிவி க்கப்படுகிறது.

இதனால் இன்றைய தினம் பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே மற்றும் பொடி மெனிக்கே ஆகிய புகையிரதங்களில் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளே காணப்பட்டனர்.

அட்டன் புகையிரத நிலையத்தில் வழமைக்கு மாறாக இன்றைய தினம் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து இறங்கியதாக அங்கு கடமை புரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

அதிகமான  சுற்றுலா பயணிகள் வருகை தருவதனாலும், சுற்றுலா பயணிகள் சுற்றுலா செய்கின்ற இடங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மேலும் அதிகரிக்கச் செய்யலாம் என பலரும் கருதுகின்றனர்.