கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை வந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் மகளிர் அணிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் மகளிர் அணிக்கும் இடையில் 3 ஒருநாள் சர்வதேச போட்டியும் 3 இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டித் தொடரும் இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் இடம் பெறவுள்ளன.

இந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இருதரப்பு கிரிக்கெட் போட்டி தொடர் தொடர்பாக செய்தியாளர்கள் மாநாடு கொழும்பு ஹில்ட்டன் ரெசிடன்ஸில் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.