இன்று உலகம் முழுவதிலும் அனுஸ்டிக்கப்படும் உலக காதலர் தினத்தை எதிர்த்து மட்டக்களப்பு காத்தான்குடியில் பாரியளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன் துண்டுப்பிரசுர வினியோகம் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.

முஹாஸபா மீடியா நெட்வேர்க்கின் அனுசரணையுடன் மற்றும் இளைஞர் தலைமைத்துவ கற்கைநெறியை தொடரும் மாணவர்கள் உட்பட சமூக அமைப்புக்கள இதனை ஏற்பாடு செய்துள்ளன.

காதல் எனும் பெயரால் கற்பை சூறையாட ஒருதினம் தேவையா.?

புறக்கணிப்போம் இந்த கலாச்சார சீரழிவை

எனும் சுவரொட்டிகள் பொது இடங்களில் பெருமளவு ஒட்டப்பட்டுள்ளதுடன் இளைஞர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.

முஸ்லிம்கள் சார்பாக குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை முன் நிறுத்தி எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- ஜவ்பர்கான்