சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து தொழிலில் ஈடுபட்ட 23 இந்திய பிரஜைகளை குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர்.

குடிவரவு குடியகல்வுத்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 23 இந்திய பிரஜைகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் ஜோதிடம் பார்கும் தொழிலிலும் 9 பேர் ஆடை விற்பனையிலும் ஈடுபட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.