ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் லுகம்போ மாவட்டத்திலுள்ள அம்ஹரா மாகாணத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளாகியதில் குறித்த பஸ்ஸில் பயணித்த பயணிகள்  38 பேர் பலியாகியுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 28 ஆண்களும் 10 பெண்களும் உள்ளடங்குவர்.

பஸ்  விபத்திற்கான காரணம்   இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்து எத்தியோப்பியா பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.