Diesel & Motor Engineering PLC (DIMO) மற்றும் இந்தியாவின் Mahindra குழுமம் ஆகியன ஒன்றிணைந்து இரு உற்பத்தி வடிவங்களுடன் நவீன Swaraj டிராக்டர்களை இலங்கையில் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளன.

விவசாயத்துறையைப் பொறுத்தவரையில் இலங்கையில் அதி நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, பல்வேறு சேவைகள், DIMO சான்று அங்கீகாரம் பெற்ற அமுலாக்க நடைமுறைகள் மற்றும் அசல் உதிரிப்பாகங்களை வழங்கும் DIMO விவசாய இயந்திரங்கள் பிரிவின் மூலமாக Mahindra குழுமத்தின் விவசாய உபகரணப் பிரிவின் அங்கமான Swaraj டிராக்டர்கள் வழங்கப்படுகின்றன.

இந்தியா எங்கிலும் 875 முகவர்களைக் கொண்ட வலையமைப்புடன் 40 ஆண்டுகளுக்கும் மேலான செழிப்பான வரலாற்றை Swaraj டிராக்டர்கள் கொண்டுள்ளன. கடந்த காலத்தில் நம்பிக்கை, ஆற்றல் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடையாளமாக இந்த வர்த்தகநாமம் மாறியுள்ளதுடன் இந்தியாவிலும் அண்டை நாடுகளிலும் 1 மில்லியனுக்கும் அதிகமான டிராக்டர்கள் இது வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரிவில் அதியுச்ச இயந்திர CC ஆற்றல் மற்றும் மிகவும் குறைந்த RPM ஆகியவற்றுடன் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் உறுதிமொழியை Swaraj டிராக்டர்கள் வழங்குகின்றன. மிகவும் இலகுவாக உபயோகிக்கக்கூடிய தொழில்நுட்பமானது பேணற்செலவுகளைக் குறைப்பதை உறுதி செய்து அனேகமான திருத்த வேலைகளை விவசாயிகள் தாமாகவே மேற்கொள்ள இடமளிப்பதுடன் கடினமாக உழைக்கக்கூடிய ஆற்றலானது எந்த வகையான நிலத்திலும், எந்த விதமான வேலைக்கும் மிகச் சிறந்த முறையில் பயன்படுகின்ற ஒன்றாக அதனை ஆக்கியுள்ளது.

விவசாயத் தேவைகளுக்குப் புறம்பாக, வர்த்தகரீதியாக பொருட்களை ஏற்றி இறக்குதல் மற்றும் நிர்மாணத் தளங்கள் போன்ற ஏனைய தேவைகளுக்கும் Swaraj டிராக்டர்களை உபயோகிக்க முடியும். DIMO நிறுவனத்தின் மிகவும் பெயர் பெற்ற விற்பனைக்குப் பின்னரான சேவை மற்றும் நாடெங்கிலும் உதிரிப்பாகங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளமை ஆகியன வாடிக்கையாளர்கள் தமது Swaraj டிராக்டர்களை இலகுவாக பேணிப் பராமரிப்பதை உறுதி செய்கின்றன. இனை அனைத்தும் மிகவும் கட்டுபடியாகும் விலைகளில் கிடைக்கப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mahindra & Mahindra Ltd நிறுவனத்தின் பிரதித் தலைமை அதிகாரியும் AFS (தெற்காசியா) இற்கான சர்வதேச தொழிற்பாடுகளின் தலைமை அதிகாரியுமான சஞ்சய் ஜாதவ் கூறுகையில்,

“Swaraj இல் பணியாற்றும் அனேகமான பொறியியலாளர்கள் விவசாய பின்னணியை சார்ந்தவர்களாக உள்ளமையால் அபிவிருத்தி நடைமுறையில் தனித்துவமான உள்ளார்ந்த அம்சங்கள் இணைக்கப்படுவது உறுதி செய்யப்படுகின்றது. 

இலங்கையில் இந்த வர்த்தகநாமத்தை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலமாக, மிகவும் பெறுமான அடிப்படை கொண்ட உற்பத்தி, விலை மற்றும் செயற்திறன் வழங்கலுடன் விவசாயிகளுக்கு பூரண நிம்மதியை வழங்குவதை நாம் நோக்காகக் கொண்டுள்ளோம்.” என்று குறிப்பிட்டார்.

DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும்ரூபவ் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே  அறிமுக நிகழ்வில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் போது,

“இலங்கையில் உலகத்தரம் வாய்ந்த தீர்வுகளை அறிமுகப்படுத்துவதில் DIMO எப்போதும் முன்னணி வகித்து வந்துள்ளது. இந்தியாவிலும், அதன் அண்டை நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு வர்த்தகநாமமான Swaraj டிராக்டர்களின் நவீன வடிவங்களை இலங்கையில் அறிமுகப்படுத்தி வைப்பதையிட்டு மிகுந்த பெருமையடைகின்றோம். எமது நாட்டின் விவசாயத் தொழிற்துறைக்கு உதவுவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளதுடன் இப்புதிய டிராக்டர் வடிவங்கள் உற்பத்தித்திறன் மற்றும் செயற்திறனை அதிகரிக்க உதவி, உள்நாட்டு விவசாயிகள் மத்தியில் செலவுகளையும் குறைத்துக்கொள்ள உதவுமென நாம் உறுதியாக நம்புகின்றோம். என்று குறிப்பிட்டார்.

855FE மற்றும் 744FE ஆகிய இரு வடிவங்களிலான Swaraj டிராக்டர்கள் இந்த அறிமுக நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 50-55 hp (குதிரைவலு) பிரிவின் கீழான SW 855 FE ஆனது 3 சிலின்டர்களுடன் தண்ணீரை குளிர்விக்கும் இயந்திரத்தைக் (water-cooled) கொண்டுள்ள ஒரு டிராக்டராகும். 3308 CC தூய்மையான ஆற்றல் மற்றும் கடினமான களத் தொழிற்பாடுகள் மற்றும் கடினமான தரையில் இடம்பெறும் தொழிற்பாடுகளுக்கு அதியுச்ச வெளிப்பலனை விளைவிக்கும் ஒரு தனித்துவமான டிராக்டராக இது காணப்படுவதுடன் direction control valve, multi speed forward மற்றும் reverse PTO, 1500 எடையை மேலுயர்த்தும் ஆற்றல் ரூபவ் power steering, dual clutch போன்ற ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களை இது கொண்டுள்ளது.

45-50 hp (குதிரைவலு) பிரிவின் கீழான Swaraj 744 FE  ஆனது அதன் உரிமையாளர்களுக்கு பணத்திற்கான உண்மையான பெறுமானத்தை வழங்குகின்றது. வலிமையான மற்றும் எரிபொருள் சிக்கனமான 3 சிலின்டர்கள் கொண்ட தண்ணீரைக் குளிர்விக்கும் water-cooled இயந்திரத்தைக் கொண்டுள்ளதுடன் 3136 CC வலுவையும் கொண்டது. PTO இயக்க பயன்பாடுகளின் போது உச்ச மட்டத்தில் எரிபொருள் சிக்கனத்தைப் பேணுவதற்கு பல் மட்ட வேகங்களுடனான (multi speed) forward மற்றும் reverse PTO தெரிவுகளையும் கொண்டுள்ளது.