இலங்­கைக்கு சீனா கோரிக்கை.!

Published By: Robert

14 Mar, 2018 | 09:30 AM
image

இலங்­கையின் தற்­போ­தைய நிலை­மையை முகா­மைத்­துவம் செய்­வ­தற்கு  அர­சாங்­கத்­திற்கும்   அதன் மக்­க­ளுக்கும்  இய­லுமை இருப்­ப­தா­கவே சீனா நம்­பு­கின்­றது.  அதே­போன்று  இலங்­கை­யா­னது இங்­குள்ள  சீன பி­ர­ஜை­களை பாது­காப்­ப­தற்கு  தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்கும் என நம்­பு­கின்றோம் என இலங்­கைக்­கான சீனத் தூதுவர்   செங் சுயான்   தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

நேற்று முன்­தினம் வெளி­வி­வ­கார அமைச்சர்  திலக் மாரப்­ப­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே  சீனத் தூதுவர் இந்த விட­யத்தை குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 

இந்த சந்­திப்­பின் ­போது சீனத் தூதுவர் மேலும் குறிப்­பி­டு­கையில்:

இலங்­கையும் சீனாவும் பாரம்­ப­ரிய நட்பு நாடுகள்.  நீண்­ட­கா­ல­மாக  இரண்டு நாடு­களும் ஒன்­றுக்­கொன்று உத­வி கொண்­டி­ருக்­கின்­றன.  இலங்­கையின் அனைத்து துறை­க­ளிலும் இணைந்து பணி­யாற்­று­வ­தற்கு  சீனா விரும்­பு­கின்­றது.   குறிப்­பாக இரண்டு நாடு­க­ளி­னதும் தலை­வர்கள்   அடைந்த   இணக்­கப்­பாட்­டுக்கு அமை­வாக செயற்­ப­டு­வ­தற்கு   இரண்டு நாடு­களும்  எதிர்­பார்க்­கின்­றன.  

அத்­துடன்   இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும் மெகா வேலைத்­திட்­டங்­களும் விரை­வு­ப­டுத்­து­வ­தற்கும்   அதன் ­மூலம் இரண்டு  நாடு­க­ளி­னதும் மக்­க­ளுக்கு நன்­மையை பெற்­றுக் ­கொ­டுப்­ப­தற்கும் சீனா எதிர்­பார்க்­கின்­றது. இலங்­கையின் தற்­போ­தைய நிலைமை தொடர்பில் சீனா   அவ­தா­னித்­து கொண்­டி­ருக்­கின்­றது. இந்த நிலை­மையை அர­சாங்­கத்­தி­னாலும் அதன் மக்­க­ளி­னாலும் தீர்த்­து ­கொள்ள முடியும் என சீனா நம்­பு­கின்­றது என்றார். 

இந்த சந்­திப்பில் வெளி­வி­வ­கார அமைச்சர்  திலக் மாரப்­பன குறிப்­பி­டு­கையில், 

சீனாவின் நீண்­ட­கால உத­வி­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கின்றோம். இலங்­கையில்   சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கும் இலங்­கையின்  தேசிய ஒற்­றுமை மற்றும்  ஸ்திரத் ­தன்­மையை பாது­காப்­ப­தற்கு  சீனா வழங்கும் ஒத்­து­ழைப்­புக்கு நன்றி தெரி­விக்­கின் றோம்.  ஒரு சீனா என்ற  சீனாவின் கொள்­கையை நாங்கள்  மதிக்­கின்றோம்.  

அத்­துடன்  சீனா இலங்­கையில் முன்­னெ­டுக் கும் திட்­டங்­களை மதிப்­பி­டவும் அனு­மதி பெற் ­றுக்­கொ­டுக்­கவும்  வெளி­வி­வ­கார அமைச்சு சம்­பந்­தப் ­பட்­ட­ தி­ணைக்­க­ளங்­க­ளுடன் ஒருங்கிணைந்து பணி யாற்றும். குறிப்பாக இலங்கை மக்கள்  உணரக் கூடிய   நன்மைகளைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின் றோம் என்றார். 

இதேவேளை  இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில்  உரிய விளக்கம் ஒன்றை   வெளிவிவகார அமைச்சர்  இதன்போது அளித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33