(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல பாதாள உலக உறுப்பினரான பெரல் சங்க  பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் பேலியகொடையில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்த நிலையில், சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பேலியகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அதிரடிப்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்ட பாதாள உலக தலைவன் தடல்லகே மஞ்சுவை பேலியகொடையில் வைத்து கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் பெரல் சங்க கைது செய்யப்பட்டு பிணையில் இருந்த நிலையிலேயே இன்று போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

போதைப் பொருள் விநியோகம்  தொடர்பில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் திட்டமிட்ட குற்றங்கள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளது.