ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் இன்று தொடக்கம் மறுஅறிவித்தல் வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னம்மை நோய் பரவல் காரணமாகவே பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரும் வரை மூட மூடப்படுவதாக, பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர  தெரிவித்துள்ளார். 

குறித்த பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுள் 27 பேர் கடந்த 3 நாட்களாக அம்மை நோய்க்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.