பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்­களின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்­கவே பிற்­போ­டப்­பட்­டது. ஏனைய கட்­சி­களின் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொண்டு விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்போம் என முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் தவி­சா­ள­ரு­மான ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்சி காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கடந்த திங்­கட்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில்  சமர்ப்­பிக்க இருந்­த­போதும் நாட்டில் இடம்­பெற்ற அசா­தா­ரண நிலை­மையை கருத்­திற்­கொண்டு அதனை அன்­றை­ய­தினம் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கா­மல்­விட்டோம். அத்­துடன் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மற்றும் ஐக்­கிய தேசிய கட்­சி­யைச்­சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஆத­ர­வ­ளிப்­ப­தாக தெரி­வித்­தனர். அவர்­களும் இந்த பிரே­ர­ணையை சிறி­து­காலம் தாம­தித்து கொண்­டு­வ­ரு­மாறு கேட்­டுக்­கொண்­டனர். அதன் பிர­கா­ரமே இன்னும் சில வாரங்­க­ளுக்கு பிற்­ப­டுத்த தீர்­மா­னித்­துள்ளோம்.

அத்­துடன் நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண நிலையை பயன்­ப­டுத்­திக்­கொண்டு பிரச்­சி­னை­களை மறைக்க அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. என்­றாலும் பிர­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை ஏனைய கட்­சி­களின் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொண்டு கொண்­டு­வ­ர­வுள்ளோம். இதனை காலம் தாழ்த்தும் நோக்கம் எங்­க­ளுக்­கில்லை. மிக­வி­ரைவில் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிப்போம்.

அத்­துடன் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி குற்­றச்­சாட்டின் பிர­தான சந்­தேக நப­ரான அர்­ஜுன மஹேந்­தி­ரனை நாட்­டுக்கு கொண்­டு­வர  பிர­த­ம­ருக்கு எந்த தேவையும் இல்லை. ஏனெனில் அவரை கொண்­டு­வந்தால் அர­சாங்­கத்­துக்கு பாரிய பிரச்­சினை ஏற்­படும். 

அர்­ஜுன மஹேந்­தி­ரனை நாட்­டுக்கு கொண்­டு­வர தேவை இருந்தால் பிர­தமர் சிங்­கப்­பூ­ருக்கு சென்­றி­ருந்­த­வேளை அந்­நாட்டு பிர­த­ம­ருடன் இது­தொ­டர்­பாக கலந்­து­ரை­யாடி இருக்­கலாம். அத்­துடன் சிங்­கப்பூர் பிர­தமர் அண்­மையில் இலங்­கைக்கு வந்­தி­ருந்தார் அப்­போ­தா­வது இது­தொ­டர்­பாக பேசி­யி­ருக்­கலாம். ஆனால் அர­சாங்கம் அதனை செய்­ய­வில்லை.

எனவே அர­சாங்கம் நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­தி­விட்டு அர­சாங்­கத்­துக்குள் இருக்கும் பிரச்­சி­னை­களை மறைக்க முயற்­சிக்­கின்­றது. ஆனால் குறு­கிய அர­சியல் நோக்­கத்­துக்­காக எதிர்க்­கட்­சி­யா­கிய எங்­கள்­மீது அதன் பழியை சுமத்தி வருகின்றது. 

அத்துடன் அரசாங்கம் தேவையான நேரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் அவசரகாலச்சட்டத்தை அமுல்படுத்த தேவைப்பட்டிருக்காது. குறிப்பிட்ட இடத்துக்கு மாத்திரம் வரையறுக்காமல் நாடு முழுவதும் இதனை அமுல்படுத்தியுள்ளதால் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு பாதிப்பாகும் என்றார்.