இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி வெற்றி இலக்காக 153 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறும் இரு அணிகளுக்குமிடையிலான சுதந்திரக் கிண்ண இருபதுக்கு - 20 போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

மழை காரணமாக போட்டி குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்காமையால் போட்டி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

தரங்க 22 ஓட்டங்களையும் சானக்க 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் தாகூர் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர் 2விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தற்போது இந்திய அணி 153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றது.