(எம்.எப்.எம்.பஸீர்)

ஆனமடுவ நகரில் அமைந்துள்ள மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடாத்தியதாக கூறப்கடும் சந்தேக நபர்கள் 7 பேரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். 

நேற்று அதிகாலை 2 மணியளவில் நடாத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பில் இன்று அதிகாலை வேளை சந்தேக நபர்களைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 பெற்றோல் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான, குறித்த ஹோட்டலுக்கு அருகில் உள்ள மற்றொரு வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. காணொளிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சந்தேக நபர்களைக் கைது செய்ததாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட 7 பேரும் 19 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டோர் எனவும், அவர்களுக்கு எதிராக அவசர கால சட்ட விதிவிதானங்களுக்கு அமைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.