இனங்களுக்கிடையில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேஸ்புக் ஊடாக போலியான தகவல்களை வெளியிட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட  கொழும்பு பாடசாலை மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

எதிர்வரும் 26ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பல்லேகலே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.