வளிமண்டலத்தில் மாற்றம் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை !

Published By: Priyatharshan

12 Mar, 2018 | 10:41 AM
image

அடுத்துவரும் 48 மணித்தியாலங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகம் அதிகரிப்பதால் மீனவர்கள் கடற்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் மேலும் கேட்டுள்கொண்டுள்ளது.

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை ஒரு தாழமுக்கப் பரப்பாக தீவிரமடைந்துள்ளதுடன் மேலும் வலுவடையுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இது இலங்கையின் தென் பகுதியில் மையம் கொண்டிருப்பதுடன் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மேக மூட்டம் காணப்படுவதுடன்  மழையுடன் கூடிய வானிலையும் தொடருமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதுடன் அவ்வேளைகளில் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70-80  கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றதுஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடற் பிரதேசங்களில் காற்று மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும் என்றும் வளிமண்டல திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42