ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வது குறித்து கோத்­தபாய

Published By: Robert

12 Mar, 2018 | 10:15 AM
image

எதிர்­வரும் 2020 ஜனா­தி­பதி தேர்­தலில் தான் போட்­டி­யி­டு­வது தொடர்­பாக, மஹிந்த ராஜ­பக்­ ஷவு­டனோ, பசில் ராஜ­பக்­ ஷவு­டனோ இன்னமும் பேச­வில்லை என்று   முன்னாள் பாது­காப்புச் செய லர் கோத்­தபாய ராஜ­பக்­ ஷ தெரி­வித்­துள்ளார்.

ஊடகம்  ஒன்­றுக்கு அளித்­துள்ள செவ்­வி­யி லேயே அவர் இதனைக் கூறி­யுள்ளார்.

எனது சகோ­த­ரர்கள் இணங்­கினால், 2020 ஜனா­தி­பதி  தேர்­தலில் போட்­டி­யிடத் தயார் என்று முன்னர் கூறி­யி­ருந்­தீர்கள், இப்­போது அதற்­கான இணக்­கத்தைப் பெற்­று­விட்­டீர்­களா என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்குப் பதி­ல­ளித்­துள்ள கோத்­தபாய ராஜ­பக்­ ஷ“நாங்கள் இது­பற்றி இன்­னமும் ஒன்­றாக அமர்ந்து கலந்­து­ரை­யா­ட­வில்லை. அதற்கு இன்­னமும் நேரம் இருக்­கி­றது என்று நினைக்­கிறேன்.

2020 அதிபர் தேர்தல் குறித்து இப்­போது கலந்­து­ரை­யா­டு­வது, மிகவும் முற்­கூட்­டிய நட­வ­டிக்­கை­யாக இருக்கும்.

சரி­யான நேரம் வரும் போது, மஹிந்த ராஜ­பக்­ ஷ ஏனைய கட்­சி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி ஒரு முடி­வுக்கு வருவார் என்று தெரி­வித்­துள்ளார்.

2020 அதிபர் தேர்­தலில் வேட்­பா­ள­ராக நீங்­களே போட்­டி­யி­டு­வீர்கள் என்று விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில, மகிந்­தா­னந்த அளுத்­க­மகே போன்­ற­வர்கள் கூறி­வ­ரு­கி­றார்கள். உங்­களின் அனு­ம­தி­யுடன் தான் அவர்கள் அதனைக் கூறு­கி­றார்­களா  என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்குப் பதி­ல­ளித்­துள்ள கோத்­த­பாய ராஜ­பக் ஷ

“இல்லை. அது அவர்­களின் தனிப்­பட்ட கருத்து. இவர்கள் மாத்­தி­ர­மன்றி வேறு பலரும் அவ்­வாறு கூறு­கி­றார்கள். ஜனா­தி­பதி  வேட்­பா­ளரை நிறுத்தும் போது எந்­த­வொரு அர­சியல் கட்­சியும், நாட்டின் அர­சியல் சூழலைக் கவ­னத்தில் எடுக்கும் என்று நான் நினைக்­கிறேன். குறித்த கட்சி அல்­லது குழுவின் சார்பில்  மிகப் பொருத்­த­மா­னவர் தான் போட்­டி­யி­டுவார்.  அதுபோன்று , இலங்கையின் இறைமை மீது நம்பிக்கை கொண்டுள்ள எமது பிரிவு மக்கள், தமது அதிபர் வேட்பாளராக மிக பொருத்தமான ஒருவரைத் தான் முடிவு செய்வார்கள்” என்று கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38