மதூஷ் லக்ஷித எனும் மாகந்தூரே மாதூஷின் இரண்டு உதவியாளர்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சமயங் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரே மாதுஷ்.

இவரின் இரு உதவியாளர்களே மாத்தறை, வெலிகம – மிதிகமை  பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து துப்பாக்கிகளும், போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மதூஷ் லக்ஷித எனும் மாகந்தூரே மாதூஷ் என அறியப்படும் பாதாள குழு தலைவர், தற்போது வெளிநாடொன்றில் தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.