24 பேரை காட்டிக்கொடுத்த மோப்ப நாய் : ஹட்டனில் சம்பவம்.!

Published By: Robert

11 Mar, 2018 | 01:54 PM
image

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 24  இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன்  நேற்று ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில், கேரள கஞ்சா வைத்திருந்த 22 பேரும், சட்டவிரோத சிகரட்டுக்கள் வைத்திருந்த 02 பேர் உட்பட மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவு ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் நேற்று காலை 11.00 மணி முதல் இரவு எட்டு மணிவரை வாகனங்களை சோதனை செய்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிவனொளிபாதமலைக்கு போதை வஸ்த்துக்களை கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் விசேட திட்டம் ஒன்றினை ஆரம்பித்து செயப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்போது, கடந்த காலங்களில் வாகனங்களை சோதனை செய்த போது நூற்றுக்கணக்கானோர் கைது செய்து ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08