எனக்கு கிடைக்­காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற ஆத்­தி­ரத்தில் கல்­லூரி மாண­வி­யொ­ரு­வரை அவ­ரு­டைய காதலர் கல்­லூரி வாசலில் வைத்து குத்­திக்­கொன்ற விவ­காரம் தமி­ழ­கத்தில் பெரும் அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

சென்னை மது­ர­வாயல், தன­லட்­சுமி நகரைச் சேர்ந்­தவர் அஸ்­வினி. 19 வய­தாகும் இவர், கே.கே.நகரில் உள்ள தனியார் கல்­லூ­ரியில் படித்து வந்­துள்ளார். இவர், கல்­லூரி வாசலில் நேற்­று­முன்­தினம் கத்­தியால் குத்திக் கொலை செய்­யப்­பட்டார். இவரைக் கொலை செய்த இளை­ஞரும் அதே இடத்தில் தீக்­கு­ளிக்க முற்­பட்­ட­போது பொது­மக்கள் அவரை பிடித்து சர­மா­ரி­யாகத் தாக்­கினர். இத­னை­ய­டுத்து பொலிஸார் தலை­யிட்டு குறித்த நபரை தனியார் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­தித்­துள்­ளனர்.

தொடர்ந்து அந்த இளை­ஞ­னிடம் பொலிஸார் நடத்­திய விசா­ர­ணையில் அவ­ரது பெயர் அழ­கேசன் என்று தெரி­ய­வந்­தது. மேலும் அவர், சென்னை மாந­க­ராட்­சியில் மலே­ரியா பணி­யா­ள­ராகப் பணி­யாற்­று­வதும் தெரிந்­தது. அஸ்­வி­னியும் அழ­கே­சனும் ஒரே பகு­தியை சேர்ந்­த­வர்கள் என்றும் இரு­வரும் காத­லித்து வந்­துள்­ளனர் என்றும் ஆனால், அஸ்­வி­னியின் தாய் அதற்கு எதிர்ப்பு தெரி­வித்­ததால் அழ­கே­ச­னுடன் பழ­கு­வதை அஸ்­வினி தவிர்த்­து­விட்டார் என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது. 

இந்­த­நி­லையில் கடந்த பெப்­ர­வரி மாதம் அஸ்­வினி வீட்­டுக்குச் சென்று அழ­கேசன், அஸ்­வி­னியைத் திரு­மணம் செய்­து­கொள்­வ­தற்­காக பெண்­கேட்­டுள்ளார். அங்கு நடந்த தக­ராறில், யாருமே எதிர்­பார்க்­காத நேரம் அஸ்­வினி கழுத்தில் தாலி­கட்ட முயன்­றுள்ளார் அழ­கேசன். அதை வீட்டில் உள்­ள­வர்கள் தடுத்­துள்­ளனர். மேலும், அது­தொ­டர்­பாக அஸ்­வினி வீட்­டினர் பொலிஸ் நிலை­யத்தில் புகா­ர­ளித்­துள்­ளனர். அதன்­பேரில் அழ­கேசன் கைது செய்­யப்­பட்டு அஸ்­வினி வீட்­டினர் கேட்­டுக்­கொண்­ட­தன்­பேரில் எச்­ச­ரித்து விடு­தலை செய்­யப்­பட்டார். 

அதன்­பி­றகும் அஸ்­வி­னியை அழ­கேசன் பின்­தொ­டர்ந்­த­மையால் ஜாபர்­கான்­பேட்­டை­யி­லுள்ள உற­வி­னர்கள் வீட்டில் தங்­கி­யி­ருந்து  அங்கு இருந்­த­ப­டியே கல்­லூ­ரிக்கு சென்று வந்­துள்ளார் அஸ்­வினி. இதனால் அஸ்­வி­னியை சந்­திக்க முடி­யாமல் இருந்­துள்ளார் அழ­கேசன். 

இதே­ச­மயம் கல்­லூ­ரிக்கு நேற்று பிற்­பகல் சென்ற அழ­கேசன், அஸ்­வி­னியை சந்­தித்து   பேசி­யுள்ளார். அப்­போது இரு­வ­ருக்­கு­மி­டையே வாக்­கு­வாதம் ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து , எனக்கு கிடைக்­காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று அழ­கேசன் கூறி­ய­படி, அஸ்­வி­னியைக் கத்­தியால் சர­மா­ரி­யாகக் குத்­தி­ய­துடன் அவரும் தற்­கொலை செய்து கொள்ள முயற்­சித்­துள்ளார்.

சம்­பவ இடத்தில் உயி­ரி­ழந்த அஸ்­வி­னியின் உடல் கீழ்­பாக்கம் அரசு மருத்­து­வ­ம­னைக்கு  பிரேத பரி­சோ­த­னைக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டது. அங்கு வந்த அஸ்­வி­னியின் தாய் `அழ­கே­ச­னுடன் பழ­காதே பேசாதே என்று பல தடவை கூறினேன். ஆனால் நீ கேட்­க­வில்­லையே. படு­பாவி என் மகளை இப்­படி கொலை செய்­து­விட்­டானே’ என்று கதறி அழு­துள்ளார்

பொது­மக்கள் தாக்­கி­யதில் காய­ம­டைந்த அழ­கே­சனை பொலிஸார் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­தித்­துள்­ளனர். அப்­போது பொலி­ஸா­ரிடம் அஸ்­வினி இறந்­து­விட்­டாரா இல்லை உயி­ரோடு இருக்­கி­றாளா என்று கேட்­டுள்ளார் அவர் இறந்­து­விட்டார் என்று பொலிஸார் கூறி­யதும் தேம்பி த் தேம்பி அழு­துள்ளார்.

அப்­போது அழ­கேசன் பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூ­ல­ம­ளிக்­கையில், 

அஸ்­வி­னிதான் முதலில் என்­னிடம் வந்து காதலை சொன்னார். அப்­போது உன் அழ­குக்கு நான் ஈடாக மாட்டேன். நான் உனக்கு பொருத்­த­மா­ன­வனும் அல்ல என்று கூறினேன். அதற்கு அஸ்­வினி நான் உங்­களை திரு­மணம் செய்து கொண்டு மகிழ்ச்­சி­யாக வாழ முடிவு செய்­துள்ளேன். எந்த சூழ்­நிலை வந்­தாலும் நான் உங்­களை விட்டு பிரியமாட்டேன் என்று சத்தியம் செய்தார். ஆனால் அஸ்வினி அவருடைய அம்மாவின் பேச்சைக்கேட்டு என்னை விட்டு விலகினார். 

நான் அவருடன் சேர்ந்து வாழவிரும்பினேன். இறுதியில் அவருடன் ஒன்றாக சாக முடிவு செய்து அவரைக்கொன்று விட்டு நானும் தீக்குளிக்க முடிவுசெய்தேன். ஆனால் நான் சில விநாடிகள் தடுமாறிய போது பொதுமக்கள் என்னைத் தடுத்துவிட்டனர் என்றார்.