கண்டி நிர்வாக மாவட்டத்தில் தற்போது அமைதியான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

கண்டி மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளில் கடந்த நாட்களாக நிலவிய குழப்பநிலையை அடுத்து ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக அங்கு பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் நிலவும் இயல்பான சூழ்நிலை காரணமாக மீண்டும் கண்டி நீர்வாக மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கபடாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.