தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே கசுன் மற்றும் அவரது மனைவியை எதிர் வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொஸ்வத்த பகுதியில் நேற்று  தனியார் பஸ் ஒன்றின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த  இருவரையும் தலங்கம பொலிஸார்  கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களை இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.