வவுனியா, புளியங்குளத்தில் நேற்று இரவு 8 மணியளவில் பன்றிக்கு வைத்த வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 8 மணியளவில் புளியங்குளம் பகுதியில் வயல் ஒன்றிற்குள் பன்றியை வேட்டையாடுவதற்காகச் சென்ற ஒருவர் பன்றிக்கு வைத்த வெடி வெடித்ததில் அதை இயக்கிய நபரான நெடுங்கேணியைச் சேர்ந்த சிதம்பரம் விஜய் என்ற 30 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.