ரஷ்யாவில் பனிக்கட்டி படலத்தில் புதைந்திருந்த 54 வெட்டப்பட்ட கைகள் மீட்பு!!!

Published By: Digital Desk 7

10 Mar, 2018 | 11:53 AM
image

ரஷ்யாவில் காப்ரோவஸ்க் என்ற பகுதியில் இருந்த பனிக்கட்டி படலத்தில் இருந்து 54 வெட்டப்பட்ட கைகள் மீட்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் சீனா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் ஆமூர் ஆறு அமைந்துள்ளது. அங்கு நிலவிவரும் கடும் குளிர் காரணமாக அந்த ஆறு உறைந்து அதன் மீது பனிக்கட்டி படலங்கள் படர்ந்துள்ளன. அந்த பனிக்கட்டி படலத்தை கட்டுமான பணி ஒன்றிற்க்காக கடந்த 8ஆம் திகதி கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எடுத்துள்ளார்கள்.  

அப்போது அங்கு ஒரு பை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பையில் 54 வெட்டப்பட்ட கைகள் இருந்துள்ளது. அதாவது 27 ஜோடி கைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த 27 கைகளில் பல கைகளில் கைரேகை அழிக்கப்பட்டு இருக்கிறது. இப்போதுவரை ஒரே ஒரு கையில் மட்டுமே கைரேகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த கைகள் யாருடையது? ஏன் வெட்டப்பட்டது? என்று இது வரை  தெரியவில்லை. அதேபோல் இந்த கைகளை வெட்டியது யார்? என்ற விவரமும் இதுவரை வெளியாகவில்லை. அது எந்த காலத்தில் வெட்டப்பட்டது? என்பதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவை வெட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது அந்த கைகளை சோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு கையில் இருக்கும் ரேகையை வைத்து ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா? என்று சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35