ரஷ்­யாவில் நடை­பெறும் டென்னிஸ் போட்டித் தொடரில் சானியா, ஹிங்கிஸ் ஜோடி, தங்­க­ளது தொடர்ச்­சி­யான 37ஆவது வெற்­றியை பதிவு செய்­தது.

ரஷ்­யாவின் செயின்ட் பீட்­டர்ஸ்­பேர்க்கில் பெண்­க­ளுக்­கான டென்னிஸ் தொடர் நடக்­கி­றது.

இதன் பெண்கள் இரட்­டையர் முதல் சுற்றில் உலகின் முதல் நிலை ஜோடி­யான இந்­தி­யாவின் சானியா மிர்சா, சுவிட்ஸர்­லாந்தின் மார்­டினா ஹிங்கிஸ், லாட்­வி­யாவின் ஜெலினா, ரஷ்­யாவின் ரோடினா ஜோடியை, 7-–5,7-–5 என, போராடி வீழ்த்­தி­யது.

இது சானியா, ஹிங்கிஸ் ஜோடி சர்­வ­தேச அரங்கில் தொடர்ச்­சி­யாக பெற்ற 37 வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.