சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் ; இரு மாணவர்கள் சி.ஐ.டி.யினரால் கைது

Published By: Priyatharshan

10 Mar, 2018 | 09:10 AM
image

இனங்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய இரு பாடசாலை மாணவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 

நேற்று முன் தினமும் நேற்றும் ஹோமாகம, கொள்ளுப்பிட்டி பகுதிகளில் வைத்து அவர்களை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஹோமாகமவில் கைது செய்யப்பட்ட மாணவனுக்கு 17 வயது எனவும் கொள்ளுப்பிட்டியில் நேற்று காலை கைது செய்யப்பட்டவருக்கு 18 வயது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நேற்று கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியொன்றில் தடுத்து வைக்க நீதிவான் ஆலோசனை வழங்கியுள்ளார். 

இதனிடையே, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாதம் பரப்பும் மேலும் பலர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22