ஜெனிவா செல்கிறது அரசாங்க தூதுக்குழு

Published By: Priyatharshan

10 Mar, 2018 | 09:00 AM
image

ஜெனி­வாவில் நடை­பெற்­று­வரும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத்  தொடரில் எதிர்­வரும் 16 ஆம் திகதி  வெள்ளிக்­கி­ழமை இலங்கை குறித்த  முத­லா­வது விவாதம் நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதில் இலங்­கையின் சார்பில் ஜெனி­வா­வுக்­கான  நிரந்­தர வதி­விட பிர­தி­நிதி பங்­கேற்று    உரை­யாற்­றுவார் என்று  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

அதே­போன்று எதிர்­வரும் 21 ஆம் திகதி  நடை­பெறும்  இலங்கை குறித்த  இரண்­டா­வது விவா­தத்தில் இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரிகள்  மற்றும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களும் இந்த   கூட்­டத்­தொ­டரில்  இலங்­கையின் சார்பில் பங்­கேற்­க­வுள்­ளனர்.  

கடந்த  2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்டு  மீண்டும்  2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்­புக்கு உட்­பட்ட  இலங்கை குறித்த பிரே­ர­ணையின் அமு­லாக்­கத்தை  அடிப்­ப­டை­யா­கக்­கொண்டே இந்த   விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. 

ஏற்­க­னவே இலங்கை குறித்த பூகோள காலக்­கி­ரம மீளாய்வு அமர்வு கடந்த நவம்பர்  மாதம் நடை­பெற்­றது.  அதன்­போது இலங்கை  குறித்த  பல்­வேறு  பரிந்­து­ரைகள் அடங்­கிய   அறிக்கை ஒன்றும்  நிறை­வேற்­றப்­பட்­டது.  அந்த அறிக்­கையில் 50 க்கும் மேற்­பட்ட  நாடு­க­ளினால் 100 க்கும் மேற்­பட்ட  பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­த­துடன்  அவை திருத்­தங்­ளுடன் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தன.  

இலங்கை  அர­சாங்கம்  சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்­டு­மென தெரி­வித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில்  பிரே­ரணை ஒன்று நிறை­வேற்­றப்­பட்­டது.  அந்தப் பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்­கமும்  அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. 

அந்தப் பிரே­ர­ணை­யா­னது கடந்த வருடம்  மார்ச் மாதம் நடை­பெற்ற  ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 34 ஆவது  கூட்டத் தொடரில் மீண்டும் புதுப்­பிக்­கப்­பட்டு  இலங்­கைக்கு மேலும் இரண்டு வரு­ட­கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது. அதன்­படி  எதிர்­வரும்  2019ஆம் ஆண்டு வரை   இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.   

எனினும்  தற்­போது வரை   குறித்த பிரே­ரணை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டாமை தொடர்பில்  சர்­வ­தேச நாடுகள் இம்­முறை கூட்­டத்தில்   கேள்­வி­யெ­ழுப்­ப­வுள்­ளன.    ஏற்­க­னவே  37 ஆவது கூட்டத்  தொடரின் முத­லா­வது  அமர்வில்  உரை­யாற்­றிய  பிரித்தானிய மற்றும்  கனடா ஆகிய நாடுகள்  இலங்கை அர­சாங்கம் பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுக்­க­வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்­தன. 

இலங்­கையின் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் காணப்­ப­டு­கின்ற தாமதம் கார­ண­மாக அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­தாக கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள்  தெரி­வித்­தி­ருந்­தன. 

 இலங்கை அர­சாங்கம் பொது­ந­ல­வாய மற்றும் சர்­வ­தேச விசா­ர­ணை­யா­ளர்கள் நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்­கான அர்ப்­ப­ணிப்பை வெ ளிக்­காட்ட வேண்டும் என்று கனடா வலி­யு­றுத்­தி­யி­ருந்த  நிலையில் ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வதில் முன்­னேற்­றத்தை வெ ளிக்­காட்­டு­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­வ­தாக பிரித்தானியா அறி­வித்­தி­ருந்­தது. 

அந்­த­வ­கையில்  இம்­முறை கூட்டத்  தொடரில் இலங்கை மீதான அழுத்­தங்கள் அதி­க­ரிக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  

இதே­வேளை  இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில்   14  உப­கு­ழுக்­கூட்­டங்கள்  ஜெனிவா மனித  உரிமை பேரவை வளா­கத்தில்  நடை­பெ­ற­வுள்­ளன.  இந்த  கூட்­டங்­களில்  இலங்கை பிர­தி­நி­திகள், பாதிக்­கப்­பட்­டோரின் பிர­தி­நி­திகள் சர்­வ­தேச நாடு­களின் தூது­வர்கள் என பல்­வேறு தரப்­பி­னரும் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர்.   

எதிர்­வரும் 12ஆம் திகதி பாரதி கலா­சார அமைப்­பினால்  இலங்கை  மனித உரிமை விவ­காரம் தொடர்பில்  ஒரு உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.   மனித உரி­மை­ 

பே­ரவை வளா­கத்தின்  23 ஆம் இலக்க   அறையில் இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

அதே­போன்று 13 ஆம் ­தி­கதி தமிழ் உலகம் என்ற அமைப்­பினால் இலங்கை தொடர்பில் ஒரு உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 7 ஆம் இலக்க அறையில் நடத்­தப்­ப­ட­வுள்ள இந்த உப­கு­ழுக்­கூட்­டத்தில் பல்­வேறு  தரப்­பினர் கலந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர். 

மேலும் 14 ஆம்­தி­கதி புத்­து­ரு­வாக்க சமூக திட்ட முன்­னணி என்ற அமைப்­பினால்  மற்­று­மொரு இலங்கை தொடர்­பான  விசேட உப­கு­ழுக்­கூட்டம்  21ஆம் இலக்க அறையில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 15 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் ஒரு சர்­வ­தேச  மனித உரிமை அமைப்­பினால் இலங்கை விவ­காரம்  தொடர்பில் விசேட உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

குறிப்­பாக இலங்­கையில் தன்­னிச்­சை­யாக  தடுத்­து­வைத்தல் விவ­காரம் தொடர்­பி­லேயே  இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இதில் பல்­வேறு தரப்­பினர் கலந்து கொண்டு இலங்கை விவ­காரம் தொடர்பில் உரை­யாற்­ற­வுள்­ளனர். 21 ஆம் இலக்க அறையில்  இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  

அத்­துடன்  எதிர்­வரும் 16ஆம் திகதி   இலங்கை மனித  உரிமை விவ­காரம் தொடர்பில் பசுமைத் தாயகம் அமைப்­பினால் ஒரு உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  அந்­தக்­கூட்­டமும் 21ஆம் இலக்க அறை­யி­லேயே   நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

மேலும்  மற்­று­மொரு சர்­வ­தேச  அமைப்­பினால் எதிர்­வரும் 19 ஆம்­தி­கதி   ஜெனிவா மனித உரிமை பேரவை வளா­கத்தில் 24ஆம் இலக்க அறையில் ஒரு  உப­கு­ழுக்­கூட்டம்  நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  இந்­தக்­கூட்­ட­மா­னது இலங்கை விவ­காரம் தொடர்பில்   ஐ.நா. வின் மீளாய்வு என்ற தலைப்பில்   நடை­பெ­ற­வுள்­ளது. 

இது இவ்­வா­றி­ருக்க பசுமை தாயகம் அமைப்­பினால் மற்­று­மொரு இலங்கை தொடர்­பான  உப­கு­ழுக்­கூட்டம் 20 ஆம்­தி­கதி 25 ஆம் இலக்க  அறையில் நடை­பெ­ற­வுள்­ளது.  இலங்­கையின் நிலை­மா­று­கால நீதி தொடர்­பாக இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அதே தினத்­தன்று சர்­வ­தேச   பௌத்த நிவா­ரண அமைப்­பினால் இலங்கை தொடர்­பான ஒரு விசேட உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.  

27ஆம் இலக்க அறையில்  இந்த உப குழுக்கூட்டம்  நடத்தப்படவுள்ளது.  அந்த 

வகையில் இந்த   அனைத்து   உபகுழுக்கூட் டங்களிலும் இலங்கை  தொடர்பான  விடயங்கள்  ஆராயப்படவுள்ளன. விசேட 

மாக   இலங்கை மனித  உரிமை நிலை 

மைகள் மற்றும்  ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல் வேறு  விடயங்கள்   தொடர்பில்  இந்த உபகுழுக்கூட்டங்களில் ஆராயப்பட வுள்ளன. 

அதன்படி ஜெனிவா செல்லவுள்ள இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழு வினர் ஜெனிவா அமர்வுகளில் உரையாற்ற வுள்ளதுடன்   உபகுழுக் கூட்டங்களிலும்  கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46