பத்தரமுல்ல கொஸ்வத்த பகுதியில் தனியார் பஸ் சாரதியொருவரை தாக்கிய தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவி தலங்கம பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது.

இதன் போது தென்மாகாண சபை உறுப்பினரின் மனைவி கைத்துப்பாக்கியொன்றையும் கையிலேந்தியவாரு குறித்த சாரதியை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் தென்மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவியையும் கைதுசெய்துள்ள தலங்கம பொலிஸார், மனைவியிடம் இருந்த கைத்துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பஸ் சாரதி முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

கைதுசெய்யப்பட்டு விசாரணைசெய்யப்பட்டுவரும் தென்மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று கடுவல நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.