ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் பலியாகியதோடு  பலர்  படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று  ஷியா மசூதிக்கு அருகில் தீவிரவாதி ஒருவர் தனது உடம்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததில் 7 பேர் பலியாகியதோடு  பலர்  படுகாயமடைந்துள்ளனர். 

இத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இத் தாக்குதலை தலிபான்கள் நிகழ்த்தி இருக்கலாம் என்று ஆப்கன் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரியில் காபூலில் ஆம்புலன்ஸில் குண்டு நிரப்பி தாலிபன்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள்  103 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.