மும்பை - மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாராப்பூர் இரசாயன ஆலையில் பொய்லர் இயந்திரம் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த நிறுவனத்தில் பரவிய தீ அதன் அருகிலுள்ள ஏனைய நிறுவனங்களுக்கும் பரவியுள்ளதால் அப்பகுதி பெரும் புகை மூட்டமாக காணப்படுகின்றது.

தகவலறிந்து விரைந்த தீயணைப்புப்படையினர் தீயை அணைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதோடு மீட்புப்பணிகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

இவ்விபத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதோடு, படுகாயமடைந்த 14 பேர் அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.