பெண்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 300 ரயில்கள் இயங்கவில்லை

Published By: Digital Desk 7

09 Mar, 2018 | 04:30 PM
image

ஸ்பெயின் நாட்டில் பாலின சமத்துவமின்மைக்கு எதிராக பெண்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 300 ரயில்கள் இயங்கவில்லை என அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகமெங்கும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் ஸ்பெயின் நாட்டில் பாலின சமத்துவமின்மைக்கு எதிராக பெண்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

இந்த 24 மணி நேர வேலை நிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

இதில் அந்த நாட்டு நடிகையும் மொடல் அழகியுமான பெனிலோப் குருசும் பங்கேற்றார். தனது நிகழ்ச்சிகளை அவர் ரத்து செய்தார். இந்த வேலை நிறுத்தத்துக்கு அங்கு 82% பேர் ஆதரவு தெரிவித்து உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. 76% ஆண்களை விட பெண்கள் சிரமப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.

ஸ்பெயினில் ஆண்களை விட பெண்கள் பொதுத்துறையில் 13 சதவீதமும், தனியார் துறையில் 19 சதவீதமும் குறைவாக சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது

இந்த சமத்துவம் இல்லாத நிலைதான் அங்கு பெண்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இவர்களது வேலை நிறுத்தம் காரணமாக ஸ்பெயினில் நேற்று 300 ரயில்கள் ஓடவில்லை என கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10