குவைட் நாட்டுக்கு பணிப்புரிய சென்று பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளான இலங்கையர்  104   பேர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இதில் 96 பெண்களும்  8 ஆண்களும்  உள்ளடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

இவர்கள் அனைவரும் அனுராதபுரம், காலி , திருக்கோணமலை , மட்டக்களப்பபு , குறுநாகல் மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.