நாட்டின் தேசிய தொழிற்­று­றை­யினை பாது­காக்க வேண்­டு­மாயின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  இந்­தி­யா­வுடன் மேற்­கொள்­ள­வுள்ள எட்கா உடன்­ப­டிக்­கையை உட­ன­டி­யாக கைவிட வேண்டும் என கூட்டு எதிர்­க்கட்­சியின் பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்­கட்­சியின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தேசிய அர­சாங்கம் உள்­ளூராட்சி மன்ற தேர்­தலின் பின்னர் மக்கள் மத்­தியில் பாரிய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி அடுத்த கட்ட தேர்­தலில் வெற்­றி­பெற  அர­சியல் காய் நகர்த்­து­கின்­றது. ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி  கூட்­டி­ணைந்து  அர­சியல் ரீதி­யாக நாட­கங்­களை அரங்­கேற்றி வரு­கின்­றன.  தற்­போது நாட்டின் முக்­கி­ய­மான வளங்கள் பெரு­ம­ள­விற்கு சீனா மற்றும் இந்­தியா­விற்கு கொடுக்கப்­பட்­டதால் தேசிய உற்­பத்­தி­யா­ளர்கள் பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

கல்வி அமைச்­சினால் இல­வ­ச­மாக வழங்­கப்­படும் பாத­ணி­க­ளுக்­கான உற்­பத்தி  ஒப்­பந்தம் இந்­தி­யா­விற்கு வழங்­கப்­பட்­ட­மையின் கார­ண­மாக தேசிய பாதணி உற்­பத்­தி­யா­ளர்கள் கடந்த காலத்தில் பெரு­ம­ள­விற்கு பாதிக்­க­ப­்பட்­டனர். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் பின்னர் நாட்டில் அர­சியல் நெருக்­கடி மற்றும் சமூக பிரச்­சி­னைகள் அதி­க­ரித்தே காணப்­ப­டு­கின்­றன.

தற்­போது இடம் பெற்­றுள்ள இனக்­க­ல­வரத்­திற்கு தேசிய அர­சாங்­கமே முழு பொறுப்­பி­னையும் ஏற்க வேண்டும். அர­சாங்­கத்தின் பொறுப்­பற்ற தன்­மையும், தக­வ­ல­றியும் சட்டம் பின்­பற்­றா­மையும் பிர­தான கார­ணி­யாக காணப்­ப­டு­கின்றது. மலிக்விக்ரமசிங்கவின் தலைமையில் கைச்சாத்திடவுள்ள எட்கா உடன்படிக்கையினை உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிடின் கூட்டு எதிர்க்கட்சி பாரிய எதிர்ப்பினை வெளிப்படுத்தும் என தெரிவித்தார்.