காலநிலை மாற்றத்தால் பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.!

Published By: Robert

09 Mar, 2018 | 12:00 PM
image

கால­நிலை மாற்­றத்தால் ஆண்­களை விடவும் பெண்­களே அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் தர­வுகள் தெரி­விக்­கின்­றன.  கால­நிலை மாற்றம் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­த­வர்­களில் 80  சத­வீ­தத்­தினர் பெண்கள்  என மேற்­படி தர­வுகள்  சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

2015  ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் செய்து கொள்­ளப்­பட்ட கால­நிலை உடன்­ப­டிக்­கை­யா­னது பெண்­களை  வலு­வூட்­டு­வது மற்றும்  அவர்கள் சம­னற்ற  விதத்தில் பாதிக்­கப்­ப­டு­வதை அடை­யாளம் காண்­பது  என்­ப­வற்­றுக்­கான விசேட ஏற்­பாட்டைக் கொண்­டுள்­ளது.

மத்­திய ஆபி­ரிக்­காவில்   கால­நிலை மாற்றம் கார­ண­மாக  சாட் ஏரியின் 90  சத­வீ­த­மான பகுதி வற்­றி­யதால் நாடோடி பூர்­வீக இன மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதன் கார­ண­மாக அந்தப் பூர்­வீக  இனத்தைச் சேர்ந்த பெண்கள்  நீரை சேக­ரிக்­க­அ­திக தூரம் பய­ணிக்க வேண்­டிய  கஷ்ட நிலையை  எதிர்­கொண்­டுள்­ள­தாக சாட் நாட்டு  பூர்­வீக பெண்கள் மற்றும் மக்கள் சங்­கத்தின்  ஒருங்­கி­ணைப்­பாளர்  ஒயு­ம­ரோயு இப்­ராஹிம்  தெரி­வித்தார். 

சாட் நாட்டில் மட்­டு­மல்­லாது உல­க­ளா­விய ரீதியில் கால­நிலை மாற்றம் கார­ண­மாக ஆண்­களை விடவும் பெண்கள் வறுமை  மற்றும் சமூக பொரு­ளா­தார குறை­பா­டுகள் என்­ப­வற்றால் பெரிதும் பாதிக்­கப்­ப­டு­வ­தா­கவும்  கால­நிலை மாற்றத்தால் இடம்­பெறும் அனர்த்­தங்­களின்போது   உட்­கட்­ட­மைப்பு வச­திகள்  அழி­வ­டைதல் மற்றும் தொழில்  இழப்பு என்­ப­னவற்றால்  பெண்­களே  அதிகம்  பாதிக்­கப்­ப­டு­வ­தா­கவும் மேற்­படி  தர­வுகள் கூறு­கின்­றன.

20  வருட காலப் பகு­தியில்  மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வொன்று   இயற்கை அனர்த்தங்கள் ஏற்­படும் போது  ஆண்­களை விடவும் பெண்­களே உயி­ரி­ழப்­பது அதி­க­மா­க­வுள்­ள­தாக தெரி­விக்­கி­றது. 

கால­நிலை மாற்­றத்தால் அதிகம்  பாதிக்­கப்­ப­டு­ப­வர்கள்  பெண்­க­ளா­க­வுள்ள நிலையில்  கால­நிலை மாற்றம் தொடர்பில்  தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் செயற்படும் அமைப்புகளில் பெண்களின் வகிபாகம் 30  சதவீதத்திற்கும் குறைவாகவுள்ளதாக  ஐக்கிய நாடுகள் சபையின்  ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52