இலங்கை பெண்கள் வெளி­நா­டு­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­க­ளுக்­காக சென்று அவர்­க­ளது வாழ்க்­கையை இழக்­கின்­றனர். அந்­நிய செலா­வ­ணிக்­காக இலங்கை அர­சாங்கம் பெண்­களை வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி வைக்­கின்­றது.  ஆனால் அவர்­க­ளுக்கு அங்கு நிகழும் கொடு­மைகள் குறித்து கவனம் செலுத்­து­வ­தில்லை  என்று  சுதந்­தி­ரத்­துக்­கான பெண்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சு பத­வியில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் வெளி­நா­டு­களில் இலங்கை பெண்­க­ளுக்கு இழைக்­கப்­படும் கொடு­மை­களை நிறுத்திவிட முடி­யாது எனவும் வெளி­நாடு சென்று விபத்­துக்­களில் சிக்­கி­ய­வர்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கப்­படும்வரை போராட்டம் தொட­ரு­மெ­னவும்    சுதந்­தி­ரத்­துக்­கான பெண்கள் இயக்கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

சர்­வ­தேச பெண்கள் தினத்­தினை முன்­னிட்டு பாரா­ளு­மன்ற வளா­கத்தில் நேற்று சுதந்­தி­ரத்­துக்­கான பெண்கள் இயக்கம் ஏற்­பாடு செய்­தி­ருந்த ஆர்ப்­பாட்­டத்தின் போதே  ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்­கண்­ட­வாறு  குறிப்­பிட்­டனர். இயக்­கத்தின் தேசிய அமைப்­பாளர் ஏமாலி அப­ய­ரத்ன கூறுகையில், 

இலங்கை பெண்கள் வேலை­வாய்ப்­பு­க­ளுக்­காக வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றனர். இந்த வரு­டத்தில் மாத்­திரம் சுமார் 95 ஆயி­ரத்து 175 பெண்கள் வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­வர்கள் மீண்டும் இலங்­கைக்கு முழு­மை­யாக திருப்பி அனுப்பி வைக்­க­ப்ப­டு­வ­தில்லை. உயிரை இழந்து, உடல் உறுப்­புக்­களை இழந்து துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தப்­பட்டு  அனுப்பி வைக்­க­ப்ப­டு­கின்­றனர். அவர்கள் குறித்து அர­சாங்கம் கவனம் செலுத்­து­வ­தில்லை என்றார்.