நிரந்­தர ஆண்­மைக்­கு­றைவு மாத்­திரை அல்­லது மல­டாக்கல் மாத்­திரை இல்லையாம்.!

Published By: Robert

09 Mar, 2018 | 11:02 AM
image

அம்­பா­றையில் நிரந்­தர  ஆண்­மைக்­கு­றைவு மாத்­திரை அல்­லது நிரந்தர  மல­டாக்கல் மாத்­திரை உண­வோடு கலக்­கப்­பட்­டது என்ற கருத்தே   அடிப்­ப­டை­யற்­றதும், விஞ்­ஞான ரீதி­யாக  சாத்­தி­ய­மற்­ற­து­மாகும் என்று உலக சுகா­தார ஸ்தாப­னமும்  ஐக்­கிய நாடுகள் சனத்­தொகை நிதி­யமும் அறி­வித்­துள்­ளன.     

இது  தொடர்பில் உலக  சுகா­தார அமை ப்பும்  ஐக்­கி­ய­நா­டு­களின்  சனத் தொகை  நிதி­யமும் இணைந்து விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,-

இலங்­கையில் அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்ற  வன்­முறைச் சம்­ப­வங்­களை   உலக சுகா­தார ஸ்தாப­னமும் ஐக்­கி­ய­நா­டு­களின் சனத்­தொகை நிதி­யமும் வன்­மை­யாக கண்­டிக்­கின்­றன. 

விசே­ட­மாக இனப்­பெ­ருக்கம் சுகா­தாரம்  தவ­றான  தகவல் ஒன்­றினால் இடம்­ பெற்ற அம்­பாறை சம்­பவம் தொடர்­பான  தவ­றான எண்­ணப்­பாட்டை நீக்கும் பொருட்டே  எமது இரண்டு நிறு­வ­னங்­க­ளாலும் இந்த அறிக்கை வெளி­யி­டப்­ப­டு­கின்­றது.  ஒரு­ம­னி­தனை நிரந்­த­ர­மாக  இன­வி­ருத்தி செய்ய முடி­யா­த­வ­ராக்­கக்­கூ­டி­ய­தான மருந்து  என்ற ஒன்றே  இல்லை அல்­லது  அறி­யப்­ப­ட­வில்லை.  

ஆகவே நிரந்­தர  ஆண்­மைக்­கு­றைவு மாத்­திரை அல்­லது நிரந்தர  மல­டாக்கல் மாத்­திரை உண­வோடு கலக்­கப்­பட்­டது என்ற கருத்தே   அடிப்­ப­டை­யற்­றதும், விஞ்­ஞான ரீதி­யாக  சாத்­தி­ய­மற்­ற­து­மாகும்.   

சரி­யான   இனப்­பெ­ருக்க சுகா­தார தக­வல்கள் மக்­க­ளுக்கு கிடைக்­க­வேண்­டி­யதன் அவ­சியம், அதிலும் குறிப்­பாக  இளை­ஞர்­களை சென்­ற­டை­ய­வேண்­டி­யதன் அவ­சியம்  இதன்­மூலம் தெளி­வாக தெரி­கின்­றது. 

இனப்­பெ­ருக்க சுகா­தாரம் குறித்த தவ­றான தக­வல்கள்    இனங்­க­ளுக்­கி­டையே வெறுப்­பையும் பதற்­றத்­தையும்  உரு­வாக்க பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இது நடை­பெ­றவே கூடாது.  உலக சுகா­தார ஸ்தாப­னமும்   உலக சனத்­தொகை நிதி­யமும்   அனைத்து இலங்­கை­யி­ன­ரதும் சிறந்த ஆரோக்­கியம் நல்­வாழ்­வுக்­காக பணி­பு­ரியும் இரண்டு நிறு­வ­னங்­க­ளாகும். 

எனவே நாமும்  ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து நாட்டில்  சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துமாறும், மனித  உரிமைகளையும் அனைவருக்குமான பாதுகாப்பு உறுதி செய்யுமாறும்,   அதிகார தரப்பினரையும் பொதுமக்களையும் வேண்டி நிற்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53