மட்டக்களப்பு சந்திவெளி துறைமுகப்பகுதியில் இரண்டு கைக்குண்டுகள் இன்று வெள்ளிக்கிழமை காலை  மீட்கப்பட்டுள்ளதாக  ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

 

பிரதேசத்தின் விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைக்காக  துப்புரவு பணியில் ஈடுபட்ட போது மர்மப் பொருள் ஒன்றை அவதானித்த நிலையில், பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

 பொலிசார் குறித்த இடத்திற்கு வருகை தந்து  அவை கைக்குண்டுகள் என அடையாளம் கண்டு அவற்றினை குறித்த பிரதேசத்தில் இருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் பொலிசார் தெரிவித்தனர்.