கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00 மணியுடன் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.