நாடளாவிய ரீதியில் இன்று வெள் ளிக்கிழமை முஸ்லி ம்களின் ஜும் ஆ தொழுகையின் போது விசேட பாதுகாப்பு கட்ட மைப்புக்களை நடைமுறைப்படுத்த பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள் ளது. 

"இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இந் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் உளவுப் பிரிவின் அறிக்கைகளை கருத்தில் கொண்டு  அவ்வந்த பிரதேசங்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் முஸ்லிம்கள் புனித ஜும் ஆ தொழுகையினை நிறைவேற்ற ஒன்று சேரும் நிலையில், தற்போது நாட்டில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த விஷேட பாதுகபபு கட்டமைப்பை அமுல் செய்ய தீர்மனைக்கப்பட்டதாகவும், எனவே முஸ்லிம்கள் தொழுகையை நிறைவேற்ற எவ்விதத்திலும் அச்சம்கொள்ளத் தேவையில்லை எனவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.